அட்டவணை - A Married Woman's Timetable - part-1

திருமதி ஆகிய நான் (ஓர் தாம்பத்தியத்தின் கால அட்டவணை)
(A Married Woman's Timetable - part 1)
அரவணைச்சுக் கொள்ளாம
அதிகாலை விடிஞ்சதில்ல

உரசிப் படுக்காம
கண்ணுறக்கம் கொண்டதில்ல

உங்க தூக்கம் கலைஞ்சு முழிச்ச
ரெண்டு நிமிஷம் பின்னனாலும்
கண்ணசந்து தூங்கிட்டாலும்,
வெரும் தண்ணி சுட வெச்சு நான் குடுக்க ,
சரட்டுன்னு முழிப்பு தட்டும் எந்திரிக்க………

ரெண்டு மணி நேரம் ஆனாலும்,
நீங்க கண் முழிக்கும் முன்னால,
காஞ்சு கிடக்கும் வயிற
காபி குடிச்சு நனச்சதில்ல…………….

சாயங்காலம் வந்தாலும்
உங்க காலடி சத்தம் கேக்காம
டீ போட நினைச்சதில்ல

வேலைக்குப் போகையிலே,
கண்ணெட்டும் தூரம் போன பின்ன,
கை தூக்கி டாட்டா காட்ட,
மனசுக்குள்ள அருவி கொட்டும்
அன்னைய பொழுத தனியா கழிக்கையிலே…………

நீங்க வீட்ட விட்டு போனதுமே
சோர்ந்துஓடி போகும் கால் படுக்க
எங்க இருந்து வருமோ தெம்பு
நீங்க வார நேரம் தெரிஞ்சு

கவிதையின் இரண்டாம் பகுதியை இங்கே வாசிக்கவும்.

Comments

பிரபலமான பதிவுகள்

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?

Bengal Famine

கணக்கு தவறானால் கம்பி எண்ணுறது நிச்சயம் - Wrongly jailed for false probabilistic assumption

“சாந்து பொட்டு, சந்தன பொட்டு” கம்பு சுத்தும் காவல்துறை!! - Corona awareness is indeed required rather than lathi charge

தொற்று நோய்: விவசாய புரட்சியின் சாபமா? - 1918 Pandemic Disease Influenza

கட்டவிழும் சமூகம்... Unleashing society...

சில்க் ரோடு பகுதி -2- USE OF BITCOIN TOR IN SILKROAD

வைரஸின் கருணையால் நாம் வாழ்கிறோமா? - Better understanding of Life of Virus

ஷோடன் - SHODAN THE SCARIEST SEARCH ENGINE