நமஸ்தே ட்ரம்ப் (Namaste Trump)

உலக நாடுகளுக்கே பஞ்சாயத்து தலைவர் என்று சொல்லும் சக்திவாய்ந்த அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), வரும் தினங்களில் இந்தியாவுக்கு அரசு சுற்று பயணமாக வர இருக்கிறார். “kem chho trump” என்று குஜராத் மொழியில் “சௌக்கியமா ட்ரம்ப்” என்பதுதான் அவரை வரவேற்க முதலில் வடிவமைக்கப்பட்ட தலைப்பு. பின்னர் ஏனோ “நமஸ்தே ட்ரம்ப்” என்று மாற்றிவிட்டனர். ஒரு காலத்தில் “ஹாலிவுட்டின் லீலைகள்” என்று கேளி கிண்டல் செய்யப்பட்ட ஒருவரை, இந்தியா ஒரு கோடி மக்கள் படை சூழ வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கிறது. 

இந்திய பிரதமரின் ஒரு நாள் பாதுகாப்பு செலவு 1.62 கோடிகள் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், அமெரிக்க அதிபருக்கு? அது மட்டும் அல்ல, அதிபர் போகும் வழி நெடுவே இரு பக்கங்களில் இருக்கும் குடிசைகளை மறைக்க மதில் சுவர் எழுப்புகிறார்கள். கேட்டால், பாதுகாப்பு காரணங்களுக்காக என்று அரசு கூறுகிறது. தாஜ் மகல் எல்லைக்குள் மின்சார வாகனங்கள் மற்றுமே செல்ல அனுமதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தாஜ் மகலை பார்வையிட செல்லும் அதிபர் தனது காரிலே போவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பலவீன எதிர்க்கட்சியாக காங்கிரஸ் வலம் வருவதைபோல, அமெரிக்காவின் எதிர் கட்சியும் பலவீனமாக இருப்பதால் அடுத்த முறையும் ட்ரம்ப் தான் அமெரிக்காவின் அதிபர் ஆவார் என்று பலரும் கணிக்கின்றனர்.

2016 தேர்தலின் வெற்றிக்கு பிறகு ட்ரம்ப் தனது உரையில் அமெரிக்க வாழ் இந்தியர்களை தனது வெற்றிக்கு பெரும் பங்காற்றினர் என்று பாராட்டினார். “We did great with the hindus என்று அவர் கூறியது மறக்க முடியாதது. மோடியை புகழ்ந்து பேசினார், ஃப்லோரிடா மற்றும் வெர்ஜினியாவில் உள்ள கோவில்களுக்கு சென்றார்.  காஷ்மீர் மற்றும் பங்களாதேசில் தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவித்தொகை கேட்டு ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இத்தகைய நிகழ்ச்சியில் ஒரு அதிபர் வேட்பாளர் பங்கு கொள்வது அதுவே முதல் முறை. ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பிரித்தாளும் யுக்தியை கையாண்டதும் மறக்க முடியாததே. சட்ட விரோதமாக குடியேறும் மக்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை அபகரித்துக் கொள்கிறார்கள். அதனால் நான் பிரதமராக வந்தால், முதலில் அமெரிக்காவிற்கும், மெக்சிகோவிற்கும் இடையில் பெரிய சுவர் எழுப்புவதாக கூறினார். அதுமட்டுமல்லாமல், இஸ்லாமியர்கள் அமெரிக்கர்களின் வாழ்க்கைமுறையில் பெரும் சவாலாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கினார். இதையெல்லாம் பார்க்குபோது இந்திய அரசியலுக்கும் அமெரிக்க அரசியலுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போல தோன்றுகிறதா?

ட்ரம்ப்பின் வெற்றிக்கு பிறகு அவரது குறி சீனாவாகத்தான் இருக்கும், இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்த மாட்டார் என்று எண்ணிக் கொண்டிருந்த நமக்கு, கடுமையான ஏற்றுமதி வரியை விதித்தார். காஷ்மீர் விஷயத்தில் பல முறை இது எங்கள் உள்நாட்டு விவகாரம் என்று சொன்ன போதும், மத்தியஸ்தம் செய்ய பல முறை மூக்கை நுழைத்தார். தனது கட்டிப்பிடி வைத்தியத்தால் மோடி சரி செய்து விடுவார் என்று இந்தியா நம்பியது. இந்த சூழலில் அவரின் இந்திய வருகை, அரசியல் ஆதாயத்துக்காக என்று பலரும் யூகிக்கின்றனர். ஏற்கனவே நாம் பார்த்தது போல், அமெரிக்க வாழ் இந்திய குடிகளின் ஓட்டுகளும் மிக முக்கிய பங்காற்றும் என கருதப்படுகிறது. தனது வருகையின் மூலம் வணிகரீதியாக பல ஒப்பந்தங்கள் இந்தியாவுடன் கையெழுத்தாகலாம் என ட்ரம்ப் கூறினாலும்,

1.பொருளாதாரம், குடியுரிமை சட்ட திருத்தம் (CAA) என்று பல சிக்கலில் இருக்கும் மோடிக்கு ட்ரம்பின் வருகை மக்களை  திசைதிருப்பும் நிகழ்ச்சியாக இருக்கலாம்.

2. இந்தியாவும் அமெரிக்காவும் என்னதான் மோதினாலும், எங்களின் நட்பு வழுவானதே என்று சீனாவுக்கு காட்டும் ஒரு சமிக்ஞையாக இருக்கலாம். 

3. ராணுவ ஒப்பந்தங்களை இந்த வருகையின் மூலம் இந்தியா பலப்படுத்த முயற்சி செய்யலாம்.

4.வரப்போகும் அதிபர் தேர்தல் பிரச்சாரங்களில், பல வணிக ஒப்பந்தங்களை சீனா, இந்தியா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் செய்துள்ளோம் என்று ட்ரம்ப் மார்தட்டிக்கொள்ளலாம். என்னதான் வணிக ஒப்பந்தங்களை பற்றி ட்ரம்ப் கூறி இருந்தாலும், அவர் பாணியில் பொடிவைத்து பேசி இருப்பது கவனிக்கத்தக்கது. (ட்ரம்பின் பேச்சு - எந்த சூழ்நிலையிலும் அமெரிக்காவிற்கு தான் முதன்மை இடம் கொடுப்பேன், இதனால் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் எட்டப்படாவிட்டாலும் வரும் காலங்களில் தொடர்ந்து முயற்சிப்பேன்.)


5. ஒர் இரவு இந்தியாவில் தங்கி செல்ல இவ்வளவு தூரம் வருகிறார் என்றால் சும்மாவா இருக்கும்? அதுவும் எதற்காக குஜராத்தை குறி வைக்கிறார்? காரணம், அமெரிக்காவில் வாழும் கனிசமான தொழிலதிபர்கள் குஜராத்திகளே. தெளிவாக, அன்மையில் நடந்த ஒரு கணக்கெடுப்பு, இவர்களின் ஆதரவு, மோடியை ஆதரிக்கும் அதிபர் வேட்பாளருக்கே கிடைக்க வாய்ப்பு அதிகம் என்று கூறி இருந்தது.

Comments

பிரபலமான பதிவுகள்

அபுதாபி

Bengal Famine

ஐரிஷ் பஞ்சம்

The Sixth Extinction: An Unnatural History

Sapiens: A Brief History of Humankind

schindler's list

The Diary of Anne Frank

குறையா புகழ் மோடி? ஒரு விமர்சனம் : Strong Image of Modi

நைட்

இருள் வலை - Dark web, the beauty of beast