நவரசா…

Netflix's Tamil anthology Navarasa to be directed by Gautham Menon, Karthik  Subbaraj, Arvind Swami, Bejoy Nambiar and more

 நவரசா… 


மீண்டும் மீண்டும் வந்த விளம்பரத்தால் பயங்கர எதிர்பார்ப்புடன் நெட்ஃபிளிக்ஸில் ஆரம்பித்தேன். தொடங்கியதும் கண்ணில் பட்டவர் விஜய் சேதுபதி. பின்னர் இயக்கம் பிஜெய் நம்பியார்னு பார்த்ததும் இன்னும் சந்தோஷம். கேரளால பெரிய டைரக்டர்ங்க.. படம் சூப்பரா இருக்கும் போலயேனு நினைக்குறதுக்கு முன்னாடி, “பார்த்தாங்கஆனா என்னை தான் பார்த்தாங்களானு தெரியலயே”, “எதாச்சும் பேசுப்பா.. பிடிக்கல சார்உங்கட்ட பேச பிடிக்கல” னு டையலாக்குஇது என்ன மணிரத்தினம் படம் மாதிரி டையலாக்கு இருக்குனு நினைக்கும்போதே ஒருத்தர் சாகஅடுத்த காட்சியில் அவரே உயிரோடு வர,.. மனசாட்சியை காமிக்குறாங்களாம்முடியல.. என்ன ஒரு நிம்மதினா, 30 நிமிஷத்துல ஒரு எப்பிசோடு முடிஞ்சுருது. இல்லனா, எப்பவும் காமிக்குற கோவிலு, கர்ப்பிணி அக்கா, வளைகாப்பு, வைரமுத்து பாட்டுல புதுசா இரண்டு இலக்கிய தமிழ் வார்த்தை (நல்லை அல்லை), ஒரு கர்னாடிக் சாங்கு, அதிரப்பள்ளி ஃபால்ஸ், அம்பாசமுத்திரம் வயக்காடுனு கொன்னுருப்பாங்க…

சரி, அடுத்த கதை நல்லா இருக்கும்னு பார்த்தா, இரண்டு பிராமணர்களுக்குள் நடக்கும் ஈகோ பிரச்சனையை எடுத்து வச்சுருக்காங்க. எத்தனையோ விஷயங்கள் இருக்கு ஆனா இப்ப இதை கதையா எடுக்குற அளவுக்கு என்ன அவசியம்னு தெரியல. நோட் பண்ற மாதிரி இந்த படத்துல சில கருத்துக்கள் இருக்கத்தான் செய்யுது. கடல பருப்பும் பைத்தம் பருப்பும் சேருமானுபாயாசத்தில ஒரு பஞ்ச்.. ஈகோ பிடிச்ச மாமாவ திருத்த சாமியா வரும் மாமி.. நடிக்க துட்டு வாங்கிட்டோமேனு கல்யாண வீட்டை சுத்தி வரும் ஒரு கைம்பெண் கேரக்டர், மொத்தத்துல கூர்ந்து பார்த்தா அவாவை காமிக்குற அவா தான் தெரிகிறது.

அதுக்கு அப்புறம்வாசுதேவ மேனன்இவரு எத்தனை தடவ தான் வாரணம் ஆயிரத்தை ஜெராக்ஸ் எடுப்பாரோ தெரியல.. அதே மைக்குமுடிமுக பாவனை.. காட்சி அமைப்பு.. புல்லட்.. இரண்டு பல்லவி.. கொஞ்சம் இங்க்லீசு.. கிட்டாருஇது எல்லாம் அப்படியே வாரணம் ஆயிரம் மாதிரி இருக்கஅதுல ஹீரோ வெளிநாட்டுக்கு போவாரேனு நினைக்கும் முன்னர் இந்த கதையிலும் ஹீரோ லண்டன்ல பாட்டு பாடிட்டு இருப்பாப்ல.. பின்ன எப்படி படத்தை முடிக்கனும்னு அவருக்கே தெரியலனு நினைக்குறேன்ஜோடி எதுக்கு சேர்ந்துச்சுஎதுக்கு பிரிஞ்சுதுனு சத்தியமா தெரியாதுங்க. அதனால ஹீரோவை “நாங்க எதுக்கு எப்படி பிரிஞ்சோம்னு தெரியலனு” சொல்ல வச்சுருப்பாரு. ஜஸ்டிஃபை பண்றாங்களாம். கடைசில ஏதோ வேதியியல், உயிரியல்னு என்னத்தையோ சொல்லி முடச்சுருப்பாப்ல.. 

அடுத்து வர்ற சீரிஸ் எல்லாம் என்னங்கஅஸ் யூஸ்வல் தான்.. ஃபுல் மீல்ஸ்க்கு தொட்டுக்க ஊருகாபொரியல்காரகுழம்பு மாதிரி.. ஒரு நக்சல் கதைஒரு எல்டிடியி கதைஒரு முஸ்லிம் கதைனு.. அப்ப அப்ப ஆக்ஸ்ஃபோர்டுகாலிக்ராஃபிஜின்ஹலுசினேஷன்னு சொல்லுவாங்க.. இதற்கு இடையில சயின்ஸ் ஃபிக்ஷன் வேறவீட்ல இருக்கும் போது போர் அடிச்சா ஒரு தடவ பாருங்க.. 

Comments

  1. உண்மையான, நல்ல விமர்சனம். ஆனா நீங்க கடைசி வரிய எழுதிருக்க வேண்டாம் 🤪🤪🤪

    ReplyDelete
  2. ஆரோக்கியமான விமர்சனம்,எனினும் ஒருமுறை பார்க்க தோணுகிறது......

    ReplyDelete
  3. படத்தை மறந்துட்டு முக்கியமான வேலை ஏதாவது இருந்தா முதல்ல அத முடிங்க..இல்ல புள்ளக்குட்டிகள போய் படிக்க வையுங்க பா..

    ReplyDelete

Post a Comment

பிரபலமான பதிவுகள்

“சாந்து பொட்டு, சந்தன பொட்டு” கம்பு சுத்தும் காவல்துறை!! - Corona awareness is indeed required rather than lathi charge

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?

அபுதாபி

Bengal Famine

கணக்கு தவறானால் கம்பி எண்ணுறது நிச்சயம் - Wrongly jailed for false probabilistic assumption

வைரஸின் கருணையால் நாம் வாழ்கிறோமா? - Better understanding of Life of Virus

தொற்று நோய்: விவசாய புரட்சியின் சாபமா? - 1918 Pandemic Disease Influenza

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

சில்க் ரோடு பகுதி -2- USE OF BITCOIN TOR IN SILKROAD

கொரோனா கவச் - Corona Kavach new App to check the safeness of places in India