அட்டவணை - A Married Woman's Timetable - part-6

குளிச்சு முடிச்சு வாரதுக்குள்ள
துவட்ட துண்டும், போட துணியும்
ரெடியா எடுத்து வைச்சதுக்கெல்லாம்,
மனசு தவியா தவிக்கும் வெளிய வந்து துள்ளி குதிக்க ......

பூசை நேரம் தினமும் வந்தா,
சட்டு புட்டுன்னு பூச போட்டு
உங்க கையால ஒத்தும் சூடம் கேட்டு 
என் கண்ண மூடி நிப்பேன்

நம்ம பிள்ளைக் குட்டி வந்த பின்னும்
துப்பித் துப்பி
விளையாட்டா  போடும் ஆட்டமெல்லாம்
அதுகளோட சேந்து நாம போட வேணும்....

நம்ம பிள்ள வந்த பின்ன கூட,
 ஒரு கையில அவன் படுத்துறங்க ,
மறுகையில நான் படுத்துக் கொள்ள
எப்பொழுதும் போல என்ன
தட்டிக் கொடுக்கும் தூக்கம் வேணும்....

உங்க கிட்ட படுக்கதுக்கு 
எங்க ரெண்டு பேருக்குள்ள
அடிபுடி சண்ட  தினமும் வேணும்.

நம்ம ரெண்டாவது புள்ள
வந்தப்புறம் கூட ,
 ஆராய்ச்சி செஞ்சுனாலும்
கிட்ட வந்து படுக்கதுக்கு
ஒரு வழிய கண்டெடுப்பேன்.

நீங்க தனியா தூங்கும் போது 
அரையடி தூரத்துல நின்னுகிட்டு
உதட்ட குவிச்சு 
இடையிலுள்ள காத்துக்கெல்லாம்
அரை நிமிசத்துக்கும் மேல
முத்தம் குடுத்துருக்கேன்

Comments

பிரபலமான பதிவுகள்

அபுதாபி

Bengal Famine

ஐரிஷ் பஞ்சம்

Sapiens: A Brief History of Humankind

The Sixth Extinction: An Unnatural History

The Diary of Anne Frank

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

குறையா புகழ் மோடி? ஒரு விமர்சனம் : Strong Image of Modi