கட்டவிழும் சமூகம்... Unleashing society...

நகர வாழ்க்கைக்கு மாறிய புதிதில் ரோட்டோரம் இருக்கும் படுக்கையறையில் படுத்து தூங்க முயற்சிக்கும் போது வண்டியோடும் சத்தமெல்லாம் மண்டைக்குள் "மே" என்று சண்டையிடும்...



சண்டையிட்டு, சமாதானமாகி மனதை கொஞ்சம் உறங்க வைப்பதற்குள் விடிந்து விடும்...

இன்றைக்கு நிலைமை தலைகீழாக உள்ளது. வண்டி ஓடும் சத்தமோ, ஒலிபெருக்கி சத்தமோ, ஓயாத இரைச்சலோ, ஏதுமின்றி செவிடாகி போன இயல்போடே நடமாடிக்கொண்டிருக்கிறேன்.

21 நாட்கள் எப்படி கடத்தபோகிறோம் என்று நினைத்து பார்க்கையில் மனம் மலைத்து போகிறதா?? அப்படி எனில் பொதுநிலை மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்....
ஆம் நீங்க கொரோனாவால் பாதிக்கப்படலாம் இல்லாமலும் போகலாம்... ஆனால் இந்த மன நோயால் நீங்கள் எப்போதாவது அல்லது எப்போதும் அதில் பாதிக்கபட்டுதான் கொண்டுருக்கிறீர்கள்...

அது என்ன எனக்கு தெரியாமல் என்னுள் இருக்கும் மன நோய் என கேள்வி எழுகிறதா? ஒரு பெரும்பான்மையான கூட்டம் காந்த சக்தியை விட மோசமாக செயல்பட்டு அவர்களின் வாழ்க்கை முறையையோ செயலையோ உங்களின் மீது திணித்து, ஏற்று கொள்ள வைத்து, அதன்படி நடக்க வைக்கிறார்கள் ..." மெட்ரிகுலேஷன்லா படிச்சவன் தான் மேதாவி" என்பதில் தொடங்கி   " வேலைக்கு போய் சம்பாதிச்சு பெரிய பணக்காரனாகலாம்" என்பதில் முடிகிறது.

இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, தன் நோயாளிகளையும் தனக்கான கிளைகளையும் விரவி திறக்கிறது இந்த கூட்டம்.

"அய்யோ இந்த லாக்டவுன்ல சம்பாதிக்கலனா என் குடும்பம் தற்கொலை தான் பண்ணிக்கனும்" என பேட்டி தரும் அக்கா ஒரு புறம்..."லாக்டவுன்.... ஜாலியா வீட்லேயே இருக்கலாம் " என கார்பரேட் காரர்கள் மறுபுறம் என நோயின் தன்மை முற்றிக்கொண்டே போகிறது...

இதற்கு மாறாக, எதிர்திசையில் பயணிக்கும் மற்றுமொரு சமூகம் இருக்கிறது. அதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை, தடையும் இல்லை.  இது, லாக்டவுனுக்கு பிறகான எதிர்காலத்தை வரவேற்க ஆர்வமுடன் காத்திருக்கிறது...

இக்குறிப்பிட்ட எதிர்திசை  சமூகம் லாக்டவுன் கழித்து வேலைக்கு போய் உட்காரும், ஆனா வேலை செய்யாது ... ஏனெனில் அந்த சமூகம் மனநிலை நோயிலிருந்து வெளி வர ஆரம்பித்திருக்கும். இரண்டு அல்லது மூன்று நாள் போனையோ டிவியையோ பார்த்து, அழுத்து போய், அதிலிருந்து வெளி வரும். வெளிப்பாடாக சுதந்திரம் பிடிக்க ஆரம்பிக்கும். இத்தனை நாள் ஒரு பெட்டியில் விடபட்ட எலியை போல தன்னுடைய எல்லைகளை வகுத்து, ராஜா என நினைத்து கொண்டு இருந்த மனம், சம கால சூழ்நிலையில், இது எனது இடம் இல்லை என அறிந்து comfort zone யை உடைத்து வெளிவரும். அப்படி வெளி வருகிற ஒவ்வொரு நபரும் தனக்கான துறையை தேர்ந்தெடுத்து அதில் முடிந்த வரை கற்று கொள்வர். தடைகளுக்கு பிறகு அனுபவம் பெற முயற்சிக்கும் சில தோல்விகளை கண்டு துயர் கொள்ளாத ஆட்கள் மட்டும் ஆளுமைகளாக உருவெடுக்கும்...

இந்த கட்டற்ற சமுதாயத்தில் இணைந்து இயங்க விரும்பும் இதயங்கள் அனைத்தும் லாக்டவுன் நாட்களை பயன்படுத்தும் ...நிலைமை தலைகீழாக மாறும். 

கட்டுகள் உடைபடட்டும்.............

(வாசகர், ரத்தினவேல் பாண்டியனின் பதிவு)

"விடாமல் உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கொரோனாவை தடுக்க உதவும் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் என் பணிவான நன்றி" - மருதாணி.

Comments

பிரபலமான பதிவுகள்

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?

“சாந்து பொட்டு, சந்தன பொட்டு” கம்பு சுத்தும் காவல்துறை!! - Corona awareness is indeed required rather than lathi charge

Bengal Famine

கணக்கு தவறானால் கம்பி எண்ணுறது நிச்சயம் - Wrongly jailed for false probabilistic assumption

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

அன்புடன் ஆச்சிக்கு...... (Lovable Grandma)

சில்க் ரோடு பகுதி -2- USE OF BITCOIN TOR IN SILKROAD

வைரஸின் கருணையால் நாம் வாழ்கிறோமா? - Better understanding of Life of Virus

கொரோனா கவச் - Corona Kavach new App to check the safeness of places in India