ஹிலாரி கிளிண்டனும் ரகசிய இமெயிலும் (Hillary Clinton - behind the screen) - 3

பில்கிளிண்டன் அதிபராக இருந்த சமயத்தில் பதவி உயர்வு பெற்ற லின்ச்(LYNCH) கிளிண்டனின் மிக நெருங்கிய நண்பர். எதற்காக இதை இங்கே கூறுகிறேன் என்றால், ஹிலாரி கிளிண்டன் வழக்குகளை விசாரித்த மூத்த அரசு வழக்கறிஞர் இவரே. (ஹிலாரிக்கு எந்த தண்டனையும் இல்லாம விடுவித்த தலைவர்!!!) ஹிலாரி கிளிண்டனின் விசாரணைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு LYNCHயும் BILL CLINTONனும் சந்தித்துள்ளனர். அவர்களின் சந்திப்பில் சந்தேகம் இருக்கிறது என்று எதிர் தரப்பு குற்றம் சாற்றியது. ஆனால், அது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று ஹிலாரி தரப்பு மறுத்தது. அதன் பின் ஹிலாரியின் வழக்கு விசாரணை கிழக்கும் மேற்குமாக திசை மாறி சென்றது. விசாரணை குழுவின் மூத்த அதிகாரியாக இருந்த காமே (COMEY) கொடுத்த குற்றபத்திரிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக்  கொண்டு ஹிலாரி மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதில் இன்னும் கவணிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், COMEYக்கு சிறப்பு ஆலோசகர்களாக இரண்டு பேர் (STRZOK மற்றும் PAGE) நியமிக்கபட்டு இருந்தனர். 



இவர்கள் இருவரும் காதலர்கள். சில நேரங்களில், கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டா பெர்ஸனல் மொபைலா இருந்தாலும் சரி, அலுவலக மொபைலா இருந்தாலும் சரி சேட்டிங் தூள் பறக்குமாம். பாவம், அதுலதான் சனியன் இருக்குனு தெரியாம பலமுறை குறுஞ்செய்திகளை இருவரும் பகிர்ந்துள்ளனர். ஏற்கனவே சொன்னதுபோல, அவர்களது கெட்ட நேரம், பரிமாரிய குறுஞ்செய்திகள் கசிந்தது. இருவரின் குறுஞ்செய்திகளை சோதித்ததில் பல சுவாரஸ்யமான உண்மைகள் வெளியாகின. இருவரின் SMSல், விசாரணைக்கு முன்பே ஹிலாரிக்கு எந்த தண்டனையும் கிடைக்காது என்று பேசி இருந்தது தெரியவந்தது. இந்த இருவருக்கும் எப்படி தெரியும்? அவர்கள் என்ன தீர்க்கதரிசிகளா? இல்லை. ஹிலாரி கிளிண்டனின் குற்றப்பத்திரிக்கையை தயார் செய்தவர்களில் இவர்களும் உண்டு.

ஹிலாரி கிளிண்டனின் கணவர் பில் கிளிண்டன் (முன்னாள் அதிபர்) பல நாடுகளுக்கு சென்று விரிவுரைகள் கொடுப்பாறாம். அதற்காக அவர் பெரும் சம்பளம் பல லட்ச டாலர்கள். எப்படினா, பெரிய பெரிய முதலாளிகளிடம் வியாபார டீல் முடிஞ்சதும், அவங்க நிறுவனத்துக்கே சென்று சொற்பொழிவு கொடுத்து பின்னர் பல லட்சங்கள் சம்பளமாக பெருவாராம். இப்படி வியாபார டீல்களை முடிக்க நினைத்த பல வெளிநாடுகள், பில் கிளிண்டனுக்கு விரிவுரை (சொற்பொழிவு) என்ற பெயரில் பணம் கொடுப்பதற்கு ஆர்வம் காட்டின. 

இந்த இடைப்பட்ட காலத்தில் “கிளிண்டன் பவுண்டேசன்” என்ற ஒன்றை கிளிண்டன் தம்பதிகள்  ஆரம்பித்திருந்தனர். அதனுடைய இன்றைய சந்தை மதிப்பு பல நூறு கோடி டாலர்கள். இந்த அறக்கட்டளையை பயன்படுத்தி தான் கிளிண்டன் தம்பதிகள் சம்பாதிக்க ஆரம்பித்திருந்தனர். பல நாடுகளில் இருந்து பல ஆயிரம் கோடிகள் அறக்கட்டளைக்கு வந்து குவிந்தன. இதில் ரஷியாவும் அடங்கும்.

2005ல் பில் கிளிண்டன் கஜகஸ்தான் அதிபரை, தனது நண்பர் ஒருவருக்கு உதவி கேட்பதற்காக சந்தித்தார். என்ன உதவி? கிளிண்டனின் நண்பருக்கு ஒரு யுரேனியம் சுரங்கத்தை கஜகஸ்தானில் வாங்குவதற்காக. அந்த நாட்டு அதிபர் ஒரு கொடுங்கோலன் என்று உலகமே வர்ணித்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், பில் கிளிண்டன் பல நிகழ்ச்சிகள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரை வாழ்த்தினார், புகழ்ந்தார். இறுதியில், யுரேனியம் சுரங்கம் பில் கிளிண்டனின் நண்பர்க்கு கிடைத்தது. அதன் பெயர் “URANIUM ONE”. இதற்கிடைப்பட்ட நேரத்தில் கிளிண்டன் பவுண்டேசனுக்கு இரண்டு தவணையாக, “X” நிறுவனம் 3 கோடி மற்றும் 10 கோடி டாலர்களை நன்கொடையாக வழங்கியது. “URANIUM ONEன் நண்பர் நிறுவனம் தான் இந்த “X” நிறுவனம். URANIUM ONE படிப்படியாக பல யுரேனியம் நிறுவனங்களை USAல் தனக்கு சொந்தமாக்கியிருந்தது.

வருடங்கள் உருண்டோட, “ROSATON” என்னும் ஒரு ரஷ்ய நிறுவனம், URANIUM ONEன், பெரும்பாலான பங்கை வாங்கியதின் மூலம், URANIUM ONEஐ தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தது. அதுமட்டுமல்ல, USAல் URANIUM ONE வாங்கி இருந்த நிறுவனங்களும் தானாகவே அதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எப்படி இது சாத்தியம்? USAன் எதிரி நாடான ரஷ்யா, USAல் இருக்கும் நிறுவனங்களை எப்படி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது?

அமெரிக்காவில் முதலீடு செய்ய வேண்டுமானால், அங்குள்ள “வெளிநாட்டு முதலீடு குழுவிடம் (CFIUS)” அனுமதி பெற வேண்டும். அப்படியென்றால் ROSATON முறையாக அனுபதி பெற்றிருந்ததா? வேடிக்கை என்னவென்றால், CFIUS அனுமதி அளிக்கும் முன்னரே ROSATON, URANIUM ONEஐ நாங்கள் கையகப்படுத்தி விட்டோம் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த காலகட்டத்தில், பில் கிளிண்டன் மாஸ்கோவில் (ரஷ்ய தலைநகர்) இருந்தார். அவருக்கு 5 லட்சம் டாலர்களை ஒரு ரஷ்ய நிதி நிறுவனம் ஒரு மணிநேர விரிவுரைக்காக வழங்கியிருந்தது. ROSATON, URANIUM ONEஐ கையகப்படுத்திய காலத்தில், சுமார் ஆயிரம் நன்கொடையாளர்கள் கிளிண்டன் பவுண்டேசனுக்கு பணம் அளித்திருந்தனர். இதில் பல நன்கொடையாளர்களை நிறுவனங்கள் என்னும் பெயரில், ROSATON தன்வசம் வைத்திருந்தது கவணிக்கதக்கது. பல புள்ளிகள், பல தொடர்புகள், சாமர்த்தியம் உள்ளவர்கள் தொடர்பு படுத்தி கொள்ளவும். பால் வடியும் முகமாக இருக்கும் ஹிலாரி கிளிண்டன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி இத்தனையும் செய்துள்ளார்.

Comments

பிரபலமான பதிவுகள்

“சாந்து பொட்டு, சந்தன பொட்டு” கம்பு சுத்தும் காவல்துறை!! - Corona awareness is indeed required rather than lathi charge

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?

அபுதாபி

Bengal Famine

கணக்கு தவறானால் கம்பி எண்ணுறது நிச்சயம் - Wrongly jailed for false probabilistic assumption

வைரஸின் கருணையால் நாம் வாழ்கிறோமா? - Better understanding of Life of Virus

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

சில்க் ரோடு பகுதி -2- USE OF BITCOIN TOR IN SILKROAD

தொற்று நோய்: விவசாய புரட்சியின் சாபமா? - 1918 Pandemic Disease Influenza

கொரோனா கவச் - Corona Kavach new App to check the safeness of places in India